Saturday 2 July 2016

பழியைச் சுமந்தே பழகிய சமுதாயம்!


நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டவுடன் காவி பயங்கரவாத அயோக்கியர்கள் கொலை செய்த கொலைகாரனை பிடித்து அவனை தண்டிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டியதை விட இந்த கொலைச் சம்பவத்தை திசைமாற்றி இஸ்லாமியர்கள் மீது கலவரத்தை ஏவி விட்டு விட வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

அதனால் தான் காவி பயங்கரவாதிகள் ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் எஸ்.வி சேகர் போன்ற அயோக்கியர்கள் வெளிப்படையாகவே இதை லவ் ஜிகாத் என்றும், சுவாதியைக் கொலை செய்தவன் பெயர் பிலால் மாலிக் என்றும் திட்டமிட்டே பரப்பினார்கள். சுவாதி பெற்றோர்களைச் சந்தித்து விட்டு வெளியே வந்த அந்தணர் முன்னேற்ற சங்கத்தினர் சுவாதி குறித்து தவறானை அவதூறுகளைப் பரப்பாதீர்கள், அது அவர்களின் பெற்றோர்களை ரொம்பவும் பாதிக்கிறது என்று பேட்டியளித்தார்கள். ஆனால் அன்றைக்கு சாயங்காலமே லவ்ஜிகாத்தை தடுத்திடு என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை அந்தணர் முன்னேற்ற சங்கம் சார்பாக வெளியிட்டனர்.

ஆக இவர்களையெல்லாம் இயக்கியவர்கள் காவி பயங்கரவாதிகள் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சுவாதியைக் கொலை செய்த கொலைகாரனை பிடிப்பது அவர்களின் நோக்கம் அல்ல! மாறாக இந்த சாக்கை வைத்து அப்பாவி முஸ்லிம்களின் மீது கலவரத்தை ஏவிவிட்டு அந்த இரண்டு தரப்பு மக்கள் அடித்துக் கொள்வதைக் கண்டு உள்ளம் குளிர வேண்டும் என்பதே காவி பயங்கரவாதிகளின் நோக்கம்.

காந்தியைக் கொலை செய்து விட்டு முஸ்லிம்களின் மீது பழியைஒப் போட்டது போல, மாலேகானின் குண்டை வெடிக்கச் செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டது போல, அஜ்மீர், சம்ஜோதா இன்னும் பலபல குண்டுவெடிப்புகளை நடத்தி அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்ட காவி பயங்கரவாதிகள் இந்தக் கொலையையும் முஸ்லிம்கள் மீது போட்டு ஒரு பாரிய கலவரத்தை தூண்ட தயாராகினார்கள்.

கோவையில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட போதும் காவி பயங்கரவாதிகள் இதே யுக்தியைத்தான் கையாண்டார்கள். அந்தக் கொலைக்கு துளியும் தொடர்பில்லாத 19 முஸ்லிம் இளைஞர்களை அடித்தே கொன்றார்கள். அதன்மூலம் பாரிய கலவரம் அதன்பிறகு பெரிய குண்டு வெடிப்பு இதுதான் காவி பயங்கரவாதிகளின் ராஜதந்திர வேலை.

அன்றைக்கு இருந்த திமுக ஆட்சி கலைஞர் கருணாநிதியின் ஆசியுடன் வேலை பார்த்த காவி காவலர்கள் பல நூறு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவர்களின் பல பேர் இன்னமும் குற்றவாளிகள் என்று நிறுபிக்கப் படாமலேயே சிறையில் கிடக்கிறார்கள் பாவம்.

இதே நிலை சுவாதி கொலையிலும் வந்து விடும் என்று தான் காவி பயங்கரவாதிகள் திட்டமிட்டார்கள். ஒருவேளை இந்த ஆட்சி கருணாநிதியின் ஆட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் பல நூறு முஸ்லிம்கள் பிலால் மாலிக் என்ற பெயரில் சிறையில் தள்ளப்பட்டிருப்பார்கள். விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஆளும் அரசு தடை போட்ட போது அதில் நரி வேலை செய்து அந்தப் படத்தை வெளியாக்கியவர் கருணாநிதி. இஸ்லாமியர்களின் முதுகில் தொடர்ந்து குத்துபவர் கருணாநிதி.

ஆனால் ஜெயலலிதா அவர்கள் எவ்வளவோ மேல். விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களை பாதிக்கும் என்று தெரிந்தே அதற்கு தடை விதித்தார்கள். முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களோடு சுமூக உடன்பாட்டுக்கு வாருங்கள் என்று க’மல ஹாசனை விரட்டியடித்தார்கள். காவிக்கைக்கூலி க’மலஹாசன் முஸ்லிம்களிடம் பணிந்து போனாலும் கருணாநிதியின் நரித்தந்திரத்தால் படம் வெளியாகியது.

இதோ இன்றைக்கு பிலால் மாலிக்கை நோக்கி பிரச்சினை திசை திருப்பப்பட்டிருந்தால் ஒருவேளை இது கருணா ஆட்சியின் காவல்துறையாக இருந்தால் இந்நேரம் பல பிலால் மாலிக்குகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஒருவேளை உண்மையான குற்றவாளிகள் கிடைக்காத பட்சத்தில் பல ஆண்டுகள் விசாரனைக் கைதியாகவே இருந்திருப்பார்கள்.
ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விசாரனையை திசை திருப்பும் காவி பயங்கரவாதிகளின் ஓலங்களை செவியேற்காமல் தாமதமானாலும் பரவாயில்லை உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என தன்னுடைய அமைச்சுப் பணியின் கீழ் பணியாற்றும் காவல்துறைக்கு உத்தவிட்டதன் பலன், இன்றைக்கு உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டுப் பட்டு ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் காக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நற்பனியைச் செய்த தமிழக முதல்வர் அவர்கள் இன்னொரு காரியத்தையும் செய்தால் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல நடுநிலை ஹிந்துச் சகோதரர்கள் கூட மகிழ்ச்சியடைவார்கள். இஸ்லாமிய சமூகத்தின் மீது அவதூறைப் பரப்பி கலவரத்தை உண்டாக்கத் துணிந்த காவி பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இனி எவனும் தேவையில்லாத அவதூறை இஸ்லாமிய சமூகத்தின் மீதோ அல்லது வேறு சமுதாயத்தின் மீதோ சாட்டி கலவரத்தைத் தூண்டாமல் இருக்கும் படி செய்ய வேண்டும்.

இத்துனை காலமும் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்று மற்றவர்கள் அழைத்தார்கள். அது உள்ளார்ந்த அன்போ பாசமோ தெரியாது. ஆனால் இன்றைக்கு ஒரு பெரிய கொடும் பழியில் இருந்து இஸ்லாமிய சமூகத்தைக் காத்து இரண்டு சமுதாய மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படக் காரணமாய் இருந்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு இஸ்லாமிய சமூகம் சார்பாக நான் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி அம்மா!

No comments:

Post a Comment