Tuesday 5 July 2016

எங்கள் கையிலும் ஊடகம்!

நாதுராம் கோட்சே என்ற காவி பயங்கரவாதி தேசத்தந்தை காந்தியைக் கொலை செய்து விட்டு அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது போட எத்தனித்த போது நாங்கள் நிரபராதிகள் என்று சொல்ல எங்களின் கைகளில் ஊடகம் இல்லை.
நவகாளியில் கொல்கத்தாவில் அஹமதாபாத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே துவேசத்தைத் தூண்டி பெரிய கலவரத்தை உண்டாக்கிய போது எங்களின் கைகள் கட்டப்பட்டிருந்தன. நாங்கள் அப்பாவிகள் என்று சொல்ல எங்களின் கைகளில் ஊடகம் இல்லை.

எங்களுக்குச் சொந்தமான மசூதியை இடித்து தரை மட்டமாக்கி விட்டு அதற்கு எதிர் வினையாக எங்கள் மக்களின் மீதே கடுமையான கலவரத்தை இந்த காவி பயங்கரவாதிகள் உண்டாக்கினார்கள். பல நூறு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் அந்தக் கொலைகள் எதுவுமே வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டது. இதையெல்லாம் சொல்வதற்கு அன்றைக்கு எங்களின் கைகளில் ஊடகம் இல்லை.

கோவையில் போலீஸ்காரர் செல்வராஜை கொலை செய்தவர்களை தண்டிக்காமல் ஒட்டு மொத்த இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி இஸ்லாமியர்களின் சொத்துக்களை சூறையாடி முஸ்லிம் இளைஞர்களை வேட்டாயாடி உணர்ச்சியைத் தூண்டி குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கி ஒரு தாய் மக்களை எதிரிகளாக்கி கைக் கொட்டிச் சிரித்த காவி பயங்கரவாதிகளின் சதிச்செயலை மக்களுக்கு எடுத்துச் சொல்ல எங்களின் கைகளில் அன்றைக்கு ஊடகம் இல்லை நிராயுதபாணிகளாய் நின்றோம்.

சமர்பதி ரயிலின் எஸ்.6 வது பெட்டியின் நான்கு கதவுகளையும் உட்புறமாகத் தாழிட்டு உட்புறமாகத் தீவைத்து 59 கரசேவகர்களை அநியாயமாக எரித்து அந்தப் பழியை முஸ்லிம்களின் மீது போட்டு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கதறக் கதற கொலை செய்து காவி பயங்கரவாதிகள் வெறியாட்டம் ஆடிய போது கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிட்ட சதி என்று சொல்ல எங்களிடம் ஊடகம் இல்லை, நாதியற்று நின்றோம்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்ஹா குண்டுவெடிப்பை இந்திய ராணுவத்தில் இருந்த காவி பயங்கரவாதிகளின் உதவியுடன் நடத்தி விட்டு அந்தப் பழியையும் இஸ்லாமியர்களின் மீது போட்டு அதற்காக சில அப்பாவிகளை கைதும் செய்து அடைத்த போது அதைத் தட்டிக் கேட்க எங்களின் கைகளில் ஊடகங்கள் இல்லை திராணியற்று நின்றோம்.

இந்த குண்டுவெடிப்புகளையெல்லாம் துருவித்துருவி கண்டுபிடித்த நேர்மையான அதிகாரி ஹேமந்த் கர்கரேவை திட்டமிட்டே கொலை செய்ய மும்பைத் தாக்குதலை நடத்தி கர்கரேவை டார்கெட் செய்து கொலை செய்து இந்தத் தாக்குதலையும் முஸ்லிம்களின் மீது போட்ட காவி பயங்கரவாதிகளின் சதிச்செயலை நடுநிலை மக்களுக்கு எடுத்துச் சொல்ல எடுத்துச் செல்ல அன்றைக்கு எங்களின் கைகளில் ஊடகம் இல்லை.
அறிவியல் வளர்ச்சியிம் அற்புதத்தின் மூலம் சமூக வலைத்தளங்கள் ஸ்மார் போன்கள் வழியாக எங்கள் கைகளுக்கும் வந்தன…,

மாட்டுறைச்சி வைத்திருந்தார் என்ற அவதூறைப் பரப்பி அஹ்லாக் என்பவரை அடித்து கொல்லுங்கள் என்று அறிவிப்பு செய்து ஒரு அப்பாவி முதியவரை அடித்தே கொலை செய்த காவி பயங்கரவாதிகளின் செயலை எங்களால் தடுக்க முடியாவிட்டாலும் அதை மற்ற அயோக்கிய ஊடகங்கள் மறைத்தாலும் அதை அனைத்து மக்களுக்கும் எத்தி வைக்க எங்களின் கைகளில் ஊடகம் இருந்தது. காவி பயங்கரவாதிகளின் உண்மை முகம் மக்களுக்குத் தெரிந்தது.

கடுமையான மழையின் வெள்ளத்தால் சென்னை மாநகர் மூழ்கிய போது 30 ஆயிரம் களப்பணியாளர்களை தமிழகம் முழுவதிலும் இருந்து வரவழைத்து படகுகள் மூலம் மக்களைக் காத்து அவர்களுக்கு உணவளித்து மலை போலத் தேங்கிக் கிடந்த குப்பைகளை எவ்வித கவுரவமும் பார்க்காமல் தங்களின் கைகளால் அள்ளி அப்புறப் படுத்திய பட்டதாரிகள் உள்ளிட்ட சமூக நலச் சேவர்களை இயக்கிய ஒரு மாபெரும் இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதன் தலைவர்களுக்கும் களப்பணி செய்த காட்சிகளை திட்டமிட்டே காவி ஊடகங்கள் மறைத்தன.

ஆனால் கிழிந்த டவுசர்கள் 4 பேர் கூட வராத வெள்ள நிவாரணப் பணியை தங்களின் எஜமானிய விசுவாசத்திற்காக 4000 டவுசர் தொண்டர்கள் களப்பணியாற்றினார்கள் என்ற பச்சைப் பொய்யைச் சொன்ன காவி மலர் பத்திரிகையால் தவ்ஹீத் ஜமாஅத் 30 ஆயிரம் பேர் பணியாற்றினார்கள் என்பதைச் சொல்ல முடியவில்லை. எந்த ஊடகக்காரனும் தவ்ஹீத் ஜமாஅத்தையும் மற்றைய அமைப்பு சாரா முஸ்லிம்களையும் தன்னார்வலர்கள் என்ற புனைப் பெயரில் அழைத்து மறைக்க, எங்களின் கைகளில் ஊடகம் இருந்தது. சமூக வலைத்தளங்கள் மூலம் இஸ்லாமியர்களின் அலப்பறிய உயிர்காக்கும் மனிதநேயப் பணியை பலம் கொண்டு பரப்பினோம். சகோதர மக்களிடத்தில் இத்துனை காலமும் எங்களைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த தவறான பிம்பம் உடைந்து நொருங்கியது.

அதுபோல..,

சுவாதியை கவுரவக் கொலை செய்து விட்டு அந்தப் பழியை ஒரு இஸ்லாமிய இளைஞன் நட்பு வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக இஸ்லாமிய சமூகத்தின் மீதே வன்முறையை ஏவுவதற்காக லவ்ஜிகாத் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு மிகப் பெரிய கலவரத்தைத் தூண்டுவதற்கு திட்டமிட்டு சினிமா பயங்கரவாதிகள் மூலமாக விசமக் கருத்துக்களை தூவி ஒரு பெரிய கலவரத்தை உண்டாக்க முயற்சித்தார்கள். அதற்கு தினமலர் போன்ற சில காவி பயங்கரவாத ஊடகங்களையும் துணைக்கு அழைத்தார்கள்.

ஆனால் இறைவனின் மாபெரும் கிருபையால் இன்றைக்கு எங்களின் கைகளில் சமூக ஊடகங்கள் இருக்கின்றது. அதிமாகவே இருக்கின்றது. இந்த ஊடகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பத்திரிகையாளரே! இந்த ஊடகத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆய்வாளரே! இந்த ஊடகத்தில் உள்ள ஒவ்வொருவரும் செய்தியாளரே! இந்த ஊடகத்தில் உள்ள ஒவ்வொருவரும் புலணாய்வு ஆய்வாளரே! அதனால் தான் சமூக ஊடகத்தின் கடுமையான எதிர்தாக்குதல்கள் மூலம் காவி பயங்கரவாதிகளின் சதித்திட்டம் சல்லி சல்லியாய் நொறுங்கியது. தமிழகம் ஒரு மிகப்பெரிய கலவரத்தில் இருந்து காக்கப்பட்டது.
இப்படி சில சமூக ஊடகங்களை எங்களின் கைகளில் கொடுத்து எங்களையும் பத்திரிகையாளராக்கிய இறைவனுக்கு நன்றி சொல்வோம்! அத்தோடு எங்கள் கருத்துக்களை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல பேருதவி புரிந்த பேஸ்புக் நிறுவனம் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கும் எங்களின் நன்றியை சேர்த்தே சொல்வோம்.

அஹ்மத்கபீரின் புதிய பக்கத்தை லைக் செய்ய:

www.facebook.com/%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-1653235638335702/?pnref=story

No comments:

Post a Comment