Tuesday 5 July 2016

அரசாங்கத்திற்காக நாளை கவுரவ நோன்பு!




இத்துனை காலமும் சிவகாசி காலண்டரையும் இறைச்சிக் கடைக்காரர்களையும் பார்த்து பெருநாள் அறிவித்து வந்த சுன்னத் ஜமாஅத்காரர்கள் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக நபிவழி அடிப்படையில் பிறை தென்படாத காரணத்தைச் சொல்லி ரமலான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்துள்ளார்கள். பாராட்டத்தக்க விசயம்.
அதேநேரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குமரி மாவட்டம் தெங்கம்புதூரில் பிறை பார்க்கப்பட்டு உறுதிபடுத்தப்பட்டு நாளை பெருநாள் அறிவிக்கப்பட்டு விட்டது.

சரி தவ்ஹீத் ஜமாஅத் டீம், சுன்னத் ஜமாஅத் டீம். இந்த இரண்டு டீமில் யார் சொல்வது சரியான தகவல் என்பதை ஆராய்து பார்க்க வேண்டும். இந்த இரண்டி டீமிலும் பிறை பார்க்கும் கமிட்டி யாரிடம் உள்ளது? சுன்னத் ஜமாஅத்திடம் பிறைக் கமிட்டி உள்ளதா? இல்லை. தாம்பரத்தில் ஒரு சுன்னத் ஜமாஅத்காரர் பிறை பார்த்தால் அந்தத் தகவல் தங்கசாலையில் இருக்கும் பள்ளிவாசலுக்கு கூட போய் சேராது.

அதேநேரம் தவ்ஹீத் ஜமாஅத்தின் பிறை பார்க்கும் செட்டப் எவ்வாறு உள்ளது தெரியுமா? சரியான சங்கிலித் தொடர் கொண்ட பிறைபார்க்கும் செட்டப் கொண்ட ஒரே இயக்கம் இந்தியாவிலேயே தவ்ஹீத் ஜமாஅத்திடம் மட்டும் தான் உள்ளது. சென்னை முதல் குமரி வரை ஒவ்வொரு குக்கிராமங்களில் கூட தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட நாளில் பிறையைத் தேடுவார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இதற்கென ஒரு பிறைக்கமிட்டி அமைக்கப்பட்டு 3 பேர் கொண்ட குழுவினர் இதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் பிறையை இந்த கமிட்டி தான் அறிவிக்கும். பிறை பார்த்த தகவல் தருபவரின் நிலைப்பாட்டை உறுதி செய்த பின்னரே பிறை அறிவிக்கப்படும்.
அந்த அடிப்படையில் இன்றைக்கு குமரி மாவட்டத்தில் பிறை பார்த்து உறுதி படுத்திய பின்னர் பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீம்பிலும் வீராப்பிலும் முறுக்கிக் கொண்டு திரியும் சுன்னத் ஜமாஅத்தினர் நாளை நோன்பு என்று அறிவித்துள்ளார்கள். இவர்கள் எங்கே பிறை தேடினார்கள்? எந்தெந்த ஊர்களில் பிறை பார்க்க ஆளை நியமித்தார்கள் என்பதைச் சொல்ல முடியுமா?

அதுமட்டுமின்றி நேற்று டெல்லியில் இருந்து பிறப்பிக்கப்பட்ட அரசானைப்படி நாளை 6/07/2016 அன்று அறிவிக்கப்பட்டிருந்த ரமலான் விடுமுறை ரத்து செய்யப்பட்டு அதற்கு மறுநாள் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதும் டவுன் ஹாஜி அவர்கள் பெருநாளை அறிவிக்காமல் போர்வைக்குள் ஒழிந்து கிடக்க ஒரு காரணம் என கூறப்படுகின்றது.
அல்லாஹ்வை பகைத்தாலும் பரவாயில்லை அரசாங்கத்தைப் பகைக்கூடாது என்ற நிலையை டவுன் ஹாஜி எடுத்த காரணத்தால் தான் பிறை அதிகாரப்பூர்வமாக தவ்ஹீத் ஜமாஅத்தினரால் அறிவிக்கப்பட்டும் தன் வாயில் பூட்டு போட்டு படுத்துக் கிடக்கிறார். இத்துனை காலமும் தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிவிப்பை ஏற்றுக் கொண்ட டவுன் ஹாஜி அவர்கள் இம்முறை அரசு இயந்திரத்துக்கு அடிபணிந்து மக்களை பாவக்குழிக்குள் தள்ளத் தயாராகி விட்டார்.

பிறை தெரிந்தது உறுதி செய்யபட்ட நிலையில் நாளை பெருநாள் என்பதும் உறுதியானதாகும். ஆனால் பெருநாள் அன்று நோன்பு நோற்று மக்களை தவறான வழியில் வழி நடத்தும் டவுன் ஹாஜியே! நீங்கள் மிகப்பெரிய சமுதாயப் பொருப்பாளர் என்பதை அல்லாஹ்வுக்கு பயந்து நினைவுகூறுங்கள்.


நாளை கவுரவ நோன்பு வைத்து மார்க்கத்திற்கு முரணான பாதையில் மக்களை செலுத்தாதீர்! அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வர்ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ
    சகோ..நான் தவ்ஹீதை பின்பற்றுபவன்..அதன்படி 06.07.2016ல் பெருநாள் கொண்டாடி விட்டேன்.. இப்போது நான் உங்களுக்கு கூற நினைக்கும் செய்தி என்னவெனில், அந்த சர்குலரில் ஆங்கிலத்தில் In case எனும் வார்த்தையை நீங்கள் கவனித்தீர்களா? எனத்தெரியவில்லை...அதன் அர்த்தம் "ஒருவேளை". முழுமையான அர்த்தம் என்னவெனில் ஒருவேளை பிறை பார்த்தல் அடிப்படையில் 07.07.2016ல் பெருநாளாக இருந்தால் 06.07.2016 அரசு விடுமுறை ரத்து என்பதே.. ஆனால் அதை வைத்துதான் காஜி பெருநாள் 07.07.2016 என்று அறிவித்ததாக சொல்வதை ஏற்க முடியவில்லை... மேலும் காஜி என்ன மனநிலையில் 07.07.2016ல் பெருநாள் அறிவித்தார் என்பது எனக்கு தெரியவில்லை...

    ReplyDelete